பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53.32 அடியாக உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53.32 அடியாக உயர்வு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே.26) இன்று காலை 8 மணி நிலவரப்படி 53.32 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே.26) இன்று காலை 8 மணி நிலவரப்படி 53.32 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை காரணமாக, அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிந்த நிலையில், கடந்த சில தினங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்தது.

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. தற்போது மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து குறைந்தது. சனிக்கிழமை (மே.25) நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,429 கன அடியாக இருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழமை (மே.26) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,218 கன அடியாக குறைந்தது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 52.53 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 53.32 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 105 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அணையில் நீர் இருப்பு 5.27 டிஎம்சியாகவும் உள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!