பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.05 அடியாக சரிவு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.05 அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 95.25 அடியிலிருந்து 95.05 அடியாக சரிந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 95.25 அடியிலிருந்து 95.05 அடியாக சரிந்தது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணை 105 அடி நீர்மட்ட உயரம் கொண்டதாகும். நீலகிரி மலைப்பகுதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருந்து வருகிறது.

இவ்வணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது மழைப் பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அணைக்கு நேற்று (செப்.9) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 639 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (செப்.10) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,306 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 95.25 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 95.05 அடியாக சரிந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 25.17 டிஎம்சியிலிருந்து 25.02 டிஎம்சியாக குறைந்தது.

அணையில் இருந்து பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்கால், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்காலில் மொத்தம் 3,150 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai solutions for small business