/* */

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89 அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 90.08 அடியாக உள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89 அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை (பைல் படம்).

பவானிசாகர் அணையின் தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 90.08 அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2.47 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானி சாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

இன்று (மார்ச்.24) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்;-

நீர் மட்டம் - 90.08 அடி (105) ,

நீர் இருப்பு - 21.63 டிஎம்சி (32.8) ,

நீர் வரத்து வினாடிக்கு - 716 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர்வரத்து 955 கன அடி) ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 700 கன‌ அடி ,

காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கன‌ அடி நீரும் என் மொத்தம் 700 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 24 March 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...