95 அடியை நெருங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

95 அடியை நெருங்கும் பவானிசாகர்  அணையின் நீர்மட்டம்
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியை நெருங்குகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியை நெருங்குகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்குகிறது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதனால், அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று (2ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,938 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (3ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,092 கன அடியாக சரிந்துள்ளது.

அதேசமயம், அணையில் இருந்து திறக்கப்படும் நீரை காட்டிலும், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை 93.86 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 94.47 அடியை எட்டிய நிலையில், விரைவில் 95 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், அணையில் நீர் இருப்பு 24.18 டிஎம்சியிலிருந்து 24.61 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக மொத்தம் வினாடிக்கு 1,155 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil