பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியாக உயர்வு..!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியாக உயர்வு..!
X

பவானிசாகர் அணைப்பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 29 நாட்களுக்கு பிறகு நடப்பாண்டில் 2வது முறையாக மீண்டும் 90 அடியை எட்டியது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 29 நாட்களுக்கு பிறகு நடப்பாண்டில் 2வது முறையாக மீண்டும் 90 அடியை எட்டியது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணைக்கு முக்கிய நீர்வரத்தாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மாயாறும் உள்ளன.

இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நடப்பாண்டில் முதல் முறையாக ஜூலை 30ம் தேதி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்தது. இதனிடையே, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக சரிந்ததாலும் 57 நாள்களுக்கு பிறகு செப்டம்பர் 25ம் தேதி அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு கீழே சரிந்தது.

தற்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து 29 நாட்களுக்கு பிறகு இன்று (23ம் தேதி) நடப்பாண்டில் 2வது முறையாக மீண்டும் 90 அடியை எட்டியது.

இன்று (29ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 89.64 அடியில் இருந்து 90.09 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணைக்கு வரும் நீரின் அளவு 2,649 கன அடியில் இருந்து 7,222 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 21.64 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story