பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.26 அடியாக உயர்வு..!
பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (31ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 92.26 அடியாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. 105 அடி உயரமுள்ள இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த 10 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது.
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால், அதிகரித்த நீர்வரத்து, தற்போது மெல்ல சரிந்து வருகிறது.
நேற்று (30ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 19,638 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (31ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 11,969 கன அடியாக சரிந்தது.
அதேபோல், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 90.57 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 92.26 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பும் 21.96 டிஎம்சியிலிருந்து 23.08 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,305 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,205 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu