பவானிசாகர் அணை நீர்மட்டம் 57 அடியாக உயர்வு..!

பவானிசாகர் அணை நீர்மட்டம் 57 அடியாக உயர்வு..!
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை (ஜூன்.12) இன்று காலை 8 மணி நிலவரப்படி 57.08 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை (ஜூன்.12) இன்று காலை 8 மணி நிலவரப்படி 57.08 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பவானி ஆறும், மோயாறும் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு, 3 மாவட்டங்களின் முக்கிய பாசன ஆதாரமாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று (ஜூன்.11) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 965 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.12) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 978 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 150 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 155 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 56.84 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 57.08 அடியாக உயர்ந்தது. அப்போது, அணையில் நீர் இருப்பு 6.35 டிஎம்சியாக இருந்தது.

Tags

Next Story
photoshop ai tool