பவானிசாகர் அணை நீர்வரத்து 14,982 கன அடி: 88 அடியை நெருங்கியது நீர்மட்டம்

பவானிசாகர் அணை நீர்வரத்து 14,982 கன அடி: 88 அடியை நெருங்கியது நீர்மட்டம்
X

பவானிசாகர் அணைப் பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (27ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,982 கன‌ அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 88 அடியை நெருங்கியது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (27ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,982 கன‌ அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 88 அடியை நெருங்கியது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று (26ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,926 கன அடியாக இருந்த நிலையில், இன்று (27ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,982 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 86.06 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 87.70 அடியாக உயர்ந்தது. விரைவில் 88 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், நீர் இருப்பு 19.11 டிஎம்சியிலிருந்து 20.12 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் மொத்தம் வினாடிக்கு 1,205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story