94 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை

94 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை
X

பவானிசாகர் அணைப் பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் 94 அடியை நெருங்கி வருகிறது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94 அடியை நெருங்கி வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்காக நீர்வரத்து அதிகரித்தும், குறைவதுமாக உள்ளது.

இந்நிலையில், அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் நீரை காட்டிலும் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று (1ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,293 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (2ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,938 கன அடியாக குறைந்தது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 93.18 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 93.86 அடியாக உயர்ந்து, 94 அடியை நெருங்கி வருகிறது. அதேபோல், நீர் இருப்பும் 23.71 டிஎம்சியிலிருந்து 24.18 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,055 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story