பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!

பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!
X

பவானி மின் அலுவலகத்தில், மின் கட்டணம் செலுத்தும் அவசரத்தில், சமூக இடைவெளியை மறந்த மக்கள். 

பவானி மின்வாரிய அலுவலகத்தில், மின்கட்டணம் செலுத்தவதற்காக அதிகளவில் பொதுமக்கள், சமூக இடைவெளியின்றி குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. சிறு, குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது. ஏப்ரல் மாத மின்கட்டணம் செலுத்தாத உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கும் தாமதக் கட்டணத்துடன் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி இன்று கடைசி நாள் என்பதால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்களது மின்கட்டணத்தை செலுத்த குவிந்தனர்.அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்தவதற்காக அதிகளவில் பொதுமக்கள், காலை முதலே குவிய தொடங்கினர். மேலும் சமுக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூடியதால் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பவானி போலீசார், பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வரிசையாக நிற்க வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் பாதுகாப்புடன் சமூக இடைவெளியை பின்பற்றி தங்களது மின்சார கட்டணங்களை செலுத்தி சென்றனர்.

Tags

Next Story