பவானியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தீபாவளி பரிசு

பவானியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு  தீபாவளி பரிசு
X

தீபாவளி சிறப்பு பரிசுகள்.

பவானி தொகுதியில் வரும் ஞாயிறன்று தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தீபாவளி பரிசு வழங்கப்படும்

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வார வாரம் நடைபெறும் தடுப்பூசி முகாமில் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது . பவானி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் ஞாயிறன்று ஐந்தாம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தீபாவளி பரிசுகள் மற்றும் குடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஞாயிறன்று முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக 5 பேருக்கு தீபாவளி கிப்ட் பாக்ஸ் வழங்கவும், இரண்டாவது பரிசாக தற்போது மழை காலம் என்பதால் 100 பேருக்கு குடை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும்13ம் தேதி பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரிசுகளுக்கான குலுக்கல் நடைபெறும் என்றும் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றுபவர்களுக்கு பரிசுப்பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாபேட்டை பகுதியில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் பரிசு வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!