/* */

பவானி, அந்தியூர் பகுதிகளில் நாளை மறுநாள் (நவ.18) மின்தடை

ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

பவானி, அந்தியூர் பகுதிகளில் நாளை மறுநாள் (நவ.18) மின்தடை
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் அந்தியூர் மின் நிலையத்தில் நாளை மறுநாள் (நவம்பர் 18) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில், நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மறுநாள் மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை மறுநாள் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானிநகர் முழுவதும், மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன்பாளை யம், நடராஜபுரம், ராணாந கர், ஆண்டிகுளம், என்ஜி ஜிஓ காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்டக்காட்டுபுதூர், மோளகவுண்டன்புதூர், செல்லம்பகவுண்டன்பாளையம் மற்றும் வாய்க்கால்பாளையம்.

அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், கொண்டையம்பாளையம், தோப்பூர், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம், மற்றும் பர்கூர் மலைப்பகுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Nov 2023 12:45 PM GMT

Related News