தாளவாடியில் பெஸ்ட் பியூச்சர் கல்வி சேவை, வேலைவாய்ப்பு மையம் சார்பில் முப்பெரும் விழா

தாளவாடியில் பெஸ்ட் பியூச்சர் கல்வி சேவை, வேலைவாய்ப்பு மையம் சார்பில் முப்பெரும் விழா
X

Erode news- பெஸ்ட் பியூச்சர் கல்வி சேவை மற்றும் வேலை வாய்ப்பு மையம் மற்றும் கே.எஸ்.ஏ.பி ஜானகியம்மாள் இன்ஸ்டியூட் பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு முப்பெரும் விழாவில் எடுக்கப்பட்ட படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பெஸ்ட் பியூச்சர் கல்வி சேவை மற்றும் வேலை வாய்ப்பு மையம் சார்பில் மூன்றாம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது.

Erode news, Erode news today- தாளவாடியில் பெஸ்ட் பியூச்சர் கல்வி சேவை மற்றும் வேலை வாய்ப்பு மையம் சார்பில் மூன்றாம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள தனியார் அரங்கில் பெஸ்ட் பியூச்சர் கல்வி சேவை மற்றும் வேலை வாய்ப்பு மையம் மற்றும் கே.எஸ்.ஏ.பி ஜானகியம்மாள் இன்ஸ்டியூட் பயிற்சி மையம் சார்பாக மூன்றாம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விழா குழு தலைவர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை வகித்தார். இந்த விழாவில் 120 மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.


இந்த முப்பெரும் விழாவில் தாளவாடி காவல் துணை ஆய்வாளர் பிரபாகரன் மாதள்ளி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ், எரகனள்ளி துவக்கப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் காளராசு, தாளவாடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜோசப், கொடாக் லைஃப் இன்சூரன்ஸ் கோபி துணை மேலாளர் செல்வராஜ், நல வாரியம் அதிகாரி மகாலிங்கம், திமுக ஒன்றிய செயலாளர் சிவண்ணா,அதிமுக ஒன்றிய செயலாளர், கவுன்சிலருமான மாதேஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவினை நிர்வாக அதிகாரி நவீன் குமார் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு எந்த கல்லூரியில் சேரலாம் மற்றும் பாடப்பிரிவு குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ரூ.2 கோடி மோசடி..! துணை தாசில்தாரை ஏமாற்றிய சென்னை வாலிபர் கைது..!