ஈரோடு மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு விருது வழங்கிய ஆட்சியர்..!
மகளிர் சுய உதவிக் குழுக் கடன் வழங்குவதில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா விருது வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2023-2024ம் ஆண்டுக்கான மகளிர் சுய உதவிக் குழு கடன் வழங்குவதில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கனரா வங்கிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
மேலும், சிறந்த வங்கிக்கிளைக்கான முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்துக்கான காசோலை அந்தியூர் கனரா வங்கிக்கிளைக்கும், 2ம் பரிசாக பெரியபுலியூர் கிளை, பிஏசிஎஸ் வங்கிக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை மாணிக்கம்பாளையம் வங்கி கிளை பிஏசிஎஸ்க்கும் வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதன்மை வங்கி மேலாளர் (கனரா வங்கி) ராஜ்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பிரியா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) அர்ஜுன், மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) சதீஷ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu