ஈரோடு மாவட்டத்தில் 3 சிறந்த அரசு பள்ளிகள் தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் 3 சிறந்த அரசு பள்ளிகள் தேர்வு
X

சிறந்த அரசு பள்ளிக்கான விருது (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் மூன்று அரசு தொடக்க பள்ளிகள் 2023-2024க்கான சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் மூன்று அரசு தொடக்க பள்ளிகள் 2023-2024க்கான சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டன.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகளுக்கான பரிசு, கேடயம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் சிறந்த பள்ளிகளாக மாவட்டத்துக்கு 3 பள்ளிக்கூடங்கள் வீதம் 38 மாவட்டங்களிலும் மொத்தம் 114 பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

2023-24-ம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை அருகே நத்தமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மொடக்குறிச்சி அருகே சாமிநாதபுரம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறாக தேர்வு செய்யப்பட்ட 3 பள்ளிகளுக்கும் சென்னை சாந்தோம் மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் வருகிற 14ம் தேதி நடக்கும் விழாவில் பாராட்டு கேடயம் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
2 வயசு வரைக்கும் உங்க குழந்தைங்களுக்கு இந்த உணவுகளை மட்டும் குடுக்காதீங்க!!