கோபியில் நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகள் தேர்வு ஆலோசனைக் கூட்டம்

கோபியில் நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகள் தேர்வு ஆலோசனைக் கூட்டம்
X

Erode News- கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

Erode News- கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Erode News, Erode News Today- கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எதிர் வரும் 2ம் தேதியன்று ஈரோடு மாவட்டத்தில் வருகை தரும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கான பணி ஆணைகளை வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட 21 ஊராட்சி பகுதிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டம் மற்றும் பழுதடைந்த வீடுகளை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ், தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.


கோபி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், பிரேம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கலந்து கொண்ட கிராம ஊராட்சி செயலர்களுக்கு அமைச்சர் உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சி செயலர்கள் பணியாற்றும் கிராமங்களில் உள்ள விளையாட்டு குழுவினருக்கு தேவையான உபகரணங்கள் வழங்கிடத் தேவையான உறுப்பினர்களை கணக்கெடுக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story
சுகர் , பிபி இருந்தா உடனே குறைக்க ட்ரை பண்ணுங்க ..இல்லனா ஸ்ட்ரோக் வருமாமா !.