அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

Erode news- ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட வாழைத்தார்களை படத்தில் காணலாம்.
Erode news, Erode news today- அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை (நேற்று) நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தார் ரூ.1.36 லட்சத்துக்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் வாயிலாக வாழைத்தார் மறைமுக ஏலம் புதன்கிழமை (நேற்று) நடந்தது. இந்த ஏலத்தில் விவசாயிகள் மொத்தம் 1,221 வாழைத்தார்களை கொண்டு வந்திருந்தனர். வாழைத்தார் ரகங்கள் அனைத்தும், தனித்தனி ரகமாக ஏலம் நடைபெற்றது.
இதில், செவ்வாழை தார் ரூ.150 முதல் ரூ.360 வரையிலும், தேன்வாழை தார் ரூ.160 முதல் ரூ.380 வரையிலும், ரஸ்தாளி தார் ரூ.225 முதல் ரூ.420 வரையிலும், பூவன் தார் ரூ.150 முதல் ரூ.215 வரையிலும், கதளி கிலோ ரூ.8.50 முதல் ரூ.16.50 வரையிலும், நேந்திரம் கிலோ ரூ.11.50 முதல் ரூ.27 வரையிலும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 891 ரூபாய்க்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.
மேலும், கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu