அந்தியூர் அருகே வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் ரூ.1 கோடி மதிப்பு வாழைமரங்கள் சேதம்

Erode news today - அந்தியூர் அருகே நேற்றிரவு வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமாயின.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அந்தியூர் அருகே வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் ரூ.1 கோடி மதிப்பு வாழைமரங்கள் சேதம்
X

முறிந்து விழுந்துள்ள வாழை மரங்கள்.

Erode news today - ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றில், ரூ.1 கோடி மதிப்புள்ள 20,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகின.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றினால் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகியுள்ளன.

கடந்த 2 நாட்களாக பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்றிரவு மாவட்டத்தின் அந்தியூர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.


இந்த பலத்த சூறாவளி காற்றால் புதுக்காடு, விளாங்குட்டை, கள்ளிமடைகுட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அறுபது ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்துள்ள நிலையில், அங்கு மின் கம்பங்களையும் விட்டுவைக்க வில்லை. மின் கம்பங்கள் விழுந்ததால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். பலத்த காற்றில், ரூ.1 கோடி மதிப்புள்ள 20,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதிக்கு நேரில் சென்று மின்வாரிய ஊழியர்கள் முறிந்து விழுந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே வீசிய சூறாவளி காற்றால், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், முறிந்து சேதம் அடைந்தன.

சிறுமுகை அடுத்த இலுப்பநத்தம், இரும்பறை ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் 2 வாரங்களில் அறுவடை செய்யும் நிலையி வாழைத்தார்கள் இருந்தன. சில கிராமங்களில் ஒன்பது மாதமான வாழை மரங்கள் உள்ளன. இந்த நிலையில், நேற்று முன் தினம் வீசிய சூறாவளிக் காற்றில், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து, சேதம் அடைந்தன.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், ஒரு வாழைக்கு, 150 ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள, வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

Updated On: 19 March 2023 6:45 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...