செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: அந்தியூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அந்தியூர் பேருந்து நிலையம் முன்பு எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, அந்தியூரில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, சுப்ரீம் கோர்ட்டு இன்று (26ம் தேதி) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக அலுவலகங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கொண்டாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
உடன், அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் செபஸ்தியார், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், இலக்கிய அணி மாவட்ட துணை தலைவர் அங்கமுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன் (மைக்கேல்பாளையம்), குருசாமி (சங்கராபாளையம்), பாவாயி ராமசாமி (கூத்தம்பூண்டி), ஒன்றிய துணைச் செயலாளர் ராதாமணி தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu