பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு
X

மாநில கல்வி உதவித்தொகை இணையதள முகப்பு.

ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளூக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல் லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பாண்டில் புதிய மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login-ல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது ஆவணங்களை வரும் 29ம் தேதிக்குள் இணையதளம் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரையோ அல்லது ஈரோடு ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை நேரிலோ அணுகலாம் . மேலும், தகவல்களுக்கு 0424 - 2260155 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!