ஈரோட்டில் சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

ஈரோட்டில் சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
X

Erode News- காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு குறித்து சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் எடுத்துரைத்த போது எடுத்த படம்.

Erode News- ஈரோட்டில் சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு களப்பணி விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று (25ம் தேதி) நடைபெற்றது.

Erode News, Erode News Today- ஈரோட்டில் சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு களப்பணி விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று (25ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சியில் ராஜாஜிபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட 22வது வார்டு பாரதி வீதி பகுதியில் ஈரோடு நந்தா பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு காச நோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு களப்பணி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.


இந்த பயிற்சி முகாமில் காசநோய் பரவும் விதம் அதன் பாதிப்புகள், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள், காசநோய்க்கான பரிசோதனை முறைகள், நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் சேவைகள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டியவர்கள், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சல் கண்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார களப்பணி விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் வனிதா விஜயகுமார், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், சுகாதார ஆய்வாளர் சரவணன், நகர்ப்புற சுகாதார செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் 20 பேர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!