பவானியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு முகாம்

பவானியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு முகாம்

ஆண்டிக்குளம் காடையாம்பட்டியில் 100 நாள் வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பவானி அருகே உள்ள ஆண்டிக்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

பவானி அருகே உள்ள ஆண்டிக்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (27ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டாரம் ஆண்டி குளம் ஊராட்சியைச் சேர்ந்த காடையாம்பட்டி பகுதியில் 100 நாள் வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தொடர்ந்து, புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், புற்றுநோய் பாதிப்புகள், புகையிலை மற்றும் போதைப் பழக்கத்தால் ஏற்படும் இளைய சமுதாயத்தின் சீரழிவுகள், புகையிலை பயன்பாட்டினால் அதிகரித்து வரும் மரண விகிதங்கள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை மற்றும் போதை பழக்க மீட்பு ஆலோசனை, 2009ம் வருடத்திற்கு முன்பு பிறந்தவர்களின் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்வதற்கான அரசு வழங்கியுள்ள வாய்ப்பு குறித்தும் விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்த முகாமில், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், மாவட்ட புகையிலை தடுப்பு மைய சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், ரவி மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் 65 நபர்கள் கலந்து கொண்டனர்.


இறுதியில், அனைவருக்கும் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, அனைவராலும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
இசைக்குயில் லதா மங்கேஸ்கருக்கு நடிகர் திலீப்குமார் செய்த உதவி
பிரபல ஆபாச நடிகை சட்ட விரோத குடியேற்ற வழக்கில் மும்பையில் கைது
உடல், மன நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு: 3 நாளில் அறிவிப்பு
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 110 மனுக்கள்
வட மாநில கொள்ளையன் என்கவுன்டர்:  சினிமா பாணியில் விரட்டிய போலீஸார்
ஈரோடு உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
சத்தியமங்கலம் அருகே சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை தரும சாலை திறப்பு
பவானியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு முகாம்
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நட்சத்திர கல்லூரி திட்டம் அறிமுகம்
ஊட்டியில் இருந்து ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட சிறுநீரகம், கல்லீரல்
ஈரோட்டில் நாளை மறுநாள் (செப்.29) செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா
ஜம்பை தனியார் கல்லூரியில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோட்டில் தென்னக ரயில்வே ஓய்வூதியர் நலச்சங்க 9வது பொது மகா சபைக் கூட்டம்