அறச்சலூர் நவரசம் கல்லூரியில் மாநில அளவில் சதுரங்க போட்டி பரிசளிப்பு

அறச்சலூர் நவரசம் கல்லூரியில் மாநில அளவில் சதுரங்க போட்டி பரிசளிப்பு
X

அறச்சலூர் நவரசம் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.

அறச்சலூர் நவரசம் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

அறச்சலூர் நவரசம் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் நவரசம் கலை அறிவியல் கல்லூரியில், ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் மற்றும் சக்கரா விஷன் இந்தியா பவுண்டேஷன் அறக்கட்டளை இணைந்து நடத்திய சக்கரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான 27வது மாநில ரேபிட் மற்றும் 26வது மாநில ப்ளீட்ஸ் சதுரங்கப் போட்டி அண்மையில் நடைபெற்றது.


போட்டி துவக்க விழாவில் சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் டிரஸ்ட் சேர்மன் சக்ரா ராஜசேகர், நவரசம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியில் மொத்தம் 800 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர் பிரபாவதி ராஜசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைகளுக்கு பரிசுகளை மற்றும் ரொக்கம் 50,000 கோப்பைகளை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், நவரச கலை அறிவியல் கல்லூரி தலைவர் தாமோதரன், செயலாளர் செந்தில்குமார், தாளாளர் கோவிந்தசாமி, பொருளாளர் பழனிச்சாமி, நவரச அமி தாளாளர் அருண்பிரசாத், இணைச் செயலாளர் செல்வராஜ், ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் மாஸ்டர் ஸ்ரீ ஜி மற்றும் செயலாளர் ரமேஷ் ஆகியோர் பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?