ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஆடிட்டர் பயிற்சி வகுப்பு துவக்கம்
Erode news- ஆடிட்டர் பயிற்சி துவக்க நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.
Erode news, Erode news today- ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிட்டர் (தணிக்கையாளர்) பயிற்சி வகுப்புகள் துவங்கியது.
ஈரோடு அடுத்த திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அனைத்து வணிகவியல் துறைகளும், ஜே.கே.ஷா வகுப்புகள் மற்றும் வெராண்டா லேர்னிங் சொல்யுஷன்ஸ் லிமிட்டடும் இணைந்து தொழில்முறை படிப்புகள் சார்ந்த பயிற்சி மற்றும் பணிகள் தொடர்பான பயிற்சி ஆலோசனை நிகழ்ச்சியை நடத்தியது.
கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வெராண்டா லேர்னிங் சொல்யுஷன்ஸ் லிமிட்டட், ஃபீல்ட் ஃபோர்ஸ் சேல்ஸின் துணை தலைவர் சிவக்குமார் சிஏ, சிஎஸ், சிஎம்ஏ, ஏசிசிஏ, சிபிஏ மற்றும் பல்வேறு தொழில்முறை படிப்புகளை முடித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சிஏ முடித்ததற்குப் பிறகான வளர்ச்சிப் பாதை குறித்தும் பேசினார்.
ஜே.கே.ஷா வகுப்புகள் மற்றும் வெராண்டா லேர்னிங் சொல்யுஷன்ஸ் லிமிட்டடின் சிஏ பேராசிரியர்.விஷ்ணுவர்தன் தொழில்முறை பாடத் தேர்வுகளில் வெற்றி கொள்ளக் கையாளப்படும் நேர்த்தியான முறைகள் குறித்தும், ஆர்ட்டிக்கல்சிப்பின் பொழுது வழங்கப்படும் உதவித்தொகை குறித்தும் பேசினார்.
ஜே.கே.ஷா வகுப்புகள் மற்றும் வெராண்டா லேர்னிங் சொல்யுஷன்ஸ் லிமிட்டடின் தலைமை கல்வியாளர் சிஏ பேராசிரியர்.கேதன்ஷா, தணிக்கையாளர்கள் மற்றும் கணக்காளர்கள் அரங்கில் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்காக தற்போது மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முயற்சிகள் மற்றும் ஒழுக்கம் பற்றிப் பேசினார்.
இப்பயிற்சியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிறுமச் செயலியல் மற்றும் தொழில்சார் கணக்குப் பதிவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான அழகப்பன், வணிகவியல், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான குமரகுரு, வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான மங்கையர்க்கரசி, வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறை இணைப் பேராசிரியருமான சதீஷ் ஆகிய துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் இப்பயிற்சிக்கான ஏற்பாடு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu