பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தடவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்தபோது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புகழ்பெற்ற, 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கோபி மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள கிராம மக்களின் குல தெய்வமாக உள்ளது. இதனால், கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 10க்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர 14 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், காவலர் ஒருவரும் மற்றும் கோவில் பூசாரி ஒருவரும் இரவில் கோவிலில் இருப்பது வழக்கம். இந்த நிலையில், நேற்றிரவு கோவிலின் பின் பகுதி கதவு வழியாக உள்ளே வந்த 2 கொள்ளையர்கள் கோவிலின் முன் பகுதியில் இருந்த தினேஷ் என்பவருடைய பிரசாத கடையின் பூட்டை உடைத்து ரூ.55 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கோவிலின் முன்பு இருந்த உண்டியலை உடைக்க முடியாத நிலையில், திருக்கல்யாண அறைக்குள் செல்ல கதவை திறந்துள்ளனர். அப்போது, கோவிலில் அலாரம் ஒலித்தது. இதனையடுத்து, அலார சத்தத்தை கேட்டு தூக்கிக்கொண்டிருந்த பூசாரி மற்றும் காவலர் இருவரும் வந்து பார்த்தபோது, இரண்டு கொள்ளையர்களும் வெளியே செல்லும் கதவு வழியாக ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து, கோவில் ஊழியர்கள் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில், விசாரணை நடத்தினர். பின்னர், ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை தடவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், கோபி போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu