கோழி திருடர்களை தாக்கிய சம்பவம்: கோபி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

கோழி திருடர்களை தாக்கிய சம்பவம்: கோபி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
X

கோபி - சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள்.

கோபி அருகே கோழி திருட வந்தவர்களை தாக்கிய சம்பவத்தில் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோபி அருகே கோழி திருட வந்தவர்களை தாக்கிய சம்பவத்தில் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கடுக்காம்பாளையம் செட்டிதோட்டத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 52). இந்நிலையில், கடந்த 21ம் தேதி இவர் வளர்த்து வந்த இரு கோழிகளை திருடிய இருவர் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிக்க முயன்றனர். அப்போது நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டதால் இருவரும் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

மறுநாள் இருவரும் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது அப்பகுதி பொதுமக்கள் இருவரையும், வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து சிறுவலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில்,கோபி பொலவகாளிபாளையத்தை சேர்ந்த கந்தன் (வயது 23), அதே பகுதியை 17 வயது கல்லூரி மாணவர் என தெரிந்தது. பின்னர், காயமடைந்த இருவரையும் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர்.

இந்நிலையில் தங்களை ஒரு கும்பல் தாக்கியதாக, கல்லூரி மாணவர் அளித்த புகாரின்படி, அடையாளம் தெரியாத 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஊர் பொதுமக்கள் பலர் தங்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கோபி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதன் பின்னர், திடீரென கோபி-சத்தி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோபி டிஎஸ்பி தங்கவேல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது உங்கள் கோரிக்கை குறித்து உடனே. நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!