நாடாளுமன்றத் தேர்தல் 2024: ஈரோடு தொகுதியில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், எந்த வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்குகிறது Native News தமிழ்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு அருகே உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டன.
இந்நிலையில், இன்று (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை சரியாக காலை 8 மணிக்கு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. தற்போது, 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் மின்னனு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 6 அறைகளில் தலா 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதற்கான முன்னிலை நிலவரம் சற்று நேரத்தில் தெரியவரும். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முடியும் வரை முன்னணி நிலவரங்கள் மற்றும் முடிவுகளை தெரிந்து கொள்ள Native News தமிழ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu