கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு
X

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினை அந்தியூர் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோபி அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதனை, அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கள்ளிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு இலவச மருத்துவ முகாம் கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் இன்று நடைபெற்றது.

டி.என்.பாளையம் திமுக ஒன்றிய கழக செயலாளர் எம்.சிவபாலன் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் ஸ்கேன் சென்டரை எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்து பேசினார்.

இதனை தொடர்ந்து மூலிகை செடிகளை பார்வையிட்ட எம்எல்ஏ வெங்கடாசலம் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கினார். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இந்த முகாமில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, வட்டார மருத்துவ அலுவலர் மஹாலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், கள்ளிப்பட்டி மருத்துவ அலுவலர் புனிதா, கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் வெங்கடாசலம், கவுன்சிலர் கஸ்தூரி திருமுருகன் உட்பட சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products