ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு மேற்பார்வையாளர்கள் நியமனம்

ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு மேற்பார்வையாளர்கள் நியமனம்
X

பைல் படம்.

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணிக்கு மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணிக்கு மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024 ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குப்பதிவின் போது, மொத்தம் 10,86,287 (70.59 சதவீதம்) வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இத்தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக இருப்பு அறையில் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள், மத்திய மற்றும் மாநில காவல் படையினரின் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மையமாக சித்தோட்டில் உள்ள ஈரோடு, அரசு பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு வருகிற ஜூன் 4,ம் தேதியன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையும், காலை 08.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட உள்ளது.

இதில், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம், ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணியின் மேற்பார்வையாளராக ராஜிவ் ரஞ்ஜன் மீனா மற்றும் மொடக்குறிச்சி, காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணியின் மேற்பார்வையாளராக காயத்ரி என் நாயக் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா