ஈரோடு கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர், கட்டுநர் பணி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர், கட்டுநர் பணி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
X

Erode news- ஈரோடு மாவட்ட கூட்டுறவுச் சங்க பணியாளர் தேர்வு அறிவிப்பு.

Erode news- ஈரோடு கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு இன்று (9ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Erode news, Erode news today- ஈரோடு கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு இன்று (9ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் 90 விற்பனையாளர், 9 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம், நியமிக்கப்பட உள்ளன.

நீங்கள் விரும்பும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த குழுவில் இணையுங்கள். குழுக்கு செல் | ஃபோலோ செய்

மாவட்ட ஆள் சேர்ப்பு மையம், அதற்கான அறிவிப்பை இன்று (9ம் தேதி) வெளியிட்டுள்ள நிலையில், விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://drberd.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாக வரும் நவம்பர் 7ம் தேதி 5.45 மணி வரை பதிவு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையாளர், கட்டுநர் பணி முறையே, பொதுப் பிரிவில் 27,3 பிற்படுத்தப்பட்டோர் 23,2, இஸ்லாமியர் 3,0, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 19,2, ஆதிதிராவிடர் 14,2, அருந்ததியர் 3,0, பழங்குடியினர்‌ 1,0 என்ற அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். பொதுப் பிரிவு வயது 32க்குள், மற்ற பிரிவுக்கு வயது வரம்பு கிடையாது.

மேலும், கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்களுக்கு https://drberd.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!