நாமக்கலில் மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், "நாமக்கல் நீதிமன்றத்தில் உள்ள மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து நாளைக்குள் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொது பயன்பாட்டு சேவை சம்பந்தமாக பெறப்படும் மனுக்களுக்கு தீர்வுகாண, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியுடன் சேர்ந்து பணிபுரிய ஒரு உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்தப் பதவிக்கு போக்குவரத்து சேவை துறை, தபால், தந்தி அல்லது தொலைபேசி துறை, மின்சாரம், ஒளி மற்றும் நீர் வழங்கல் துறை, பொது பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, மருத்துவமனை மற்றும் மருந்தக துறை, இன்சூரன்ஸ் துறை, கல்வி மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள், வீடு, மனை மற்றும் நிலம் சார்ந்த துறை போன்ற பொது பயன்பாட்டு சேவை துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ள, 62 வயதிற்குட்பட்ட, தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் namakkal.dcourts.g0v.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, "தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நாமக்கல்-637001" என்ற முகவரிக்கு, நாளை (மார்ச், 21) மாலை 5:00 மணிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu