பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம்
X

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் எம்.எல்.ஏ. வெங்கடாசலம்.

அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று காலை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர், சிங்கார வீதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாமுக்கு வந்த அந்தியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடாசலம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான இலவச பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமக்களிடையே பூஸ்டர் தடுப்பூசி போடும் ஆர்வம் மிகவும் குறைந்தே உள்ளது.இதன் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடாசலம் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதோடு, அங்கிருந்து பொதுமக்களையும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

மேலும், பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் முககவசங்கள் அணியாமல் இருந்த பொதுமக்கள் மற்றும் பூக்கடை வைத்திருந்த பெண்களுக்கு முக கவசங்களை வழங்கி முககவசங்கள் அணியாமல் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.அதேபோல் கடைக்காரர்களிடம் முக கவசங்கள் அணிந்து வியாபாரம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!