பவானி அருகே புன்னத்தில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

பவானி அருகே புன்னத்தில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
X

Erode news- சுகாதார நலக்கல்வி குறித்து தொழிலாளர்களுக்கு எடுத்துரைத்தார் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார்.

Erode news- ஈரோடு மாவட்டம் பவானி அருகே புன்னத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை, போதை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (3ம் தேதி) நடைபெற்றது.

Erode news, Erode news today- பவானி அருகே புன்னத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை, போதை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (3ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் ஜம்பை வட்டாரம் ஆப்பக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிக்கு உட்பட்ட புன்னம் பகுதியில் உள்ள கிரிஸ்டல் நிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை, போதை பழக்க எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், காச நோயின் ஆரம்ப அறிகுறிகள், காச நோயின் வகைகள் அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள்,காச நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய் பாதிப்பால் அதிகரிக்கும் மரண விகிதங்கள், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீங்குகள் உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், போதைப் பழக்கத்தால் இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர் குகன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளர்கள் 25 பேர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai tools for education