ஆப்பக்கூடலில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி

ஆப்பக்கூடலில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி
X

Erode news- ஆப்பக்கூடலில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் உலக புகையிலை எதிரிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

Erode news- ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, இன்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டாரம் ஆப்பக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிக்கு உட்பட்ட தர்மரத்னகரா டாக்டர் மகாலிங்கம் நர்சிங் கல்லூரியில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.


இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட செவிலியப் பயிற்சி மாணவ, மாணவியர்களுக்கு உலக புகையிலை எதிர்ப்பு தின நோக்கம், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீங்குகள், உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, புகையிலை தயாரிப்பு நிறுவனங்களின் தாக்கத்திலிருந்து சிறார்களை பாதுகாத்தல், புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் மரண விகிதங்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

செவிலியர் கல்லூரி மாணவியர்களை கொண்டு புகையிலை பயன்பாட்டின் தீமைகளை விளக்கி பேச்சில்லா விழிப்புணர்வு குறு நாடகம் நடித்துக் காண்பிக்கப்பட்டது. மேலும் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர்களை கொண்டு உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி நர்சிங் கல்லூரியில் தொடங்கி பேருந்து நிறுத்தம் வரை சென்று மீண்டும் கல்லூரிக்கு வந்தடைந்தது.


பேரணி செல்லும் வழியில் உள்ள கடைகளில் உள்ள பொதுமக்களுக்கு புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மாணிக்கவேல் ராஜன், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், ஜெகதீஷ் குமார், செவிலியர் கல்லூரி விரியுரையாளர்கள் மற்றும் பயிற்சி மாணவ, மாணவியர்கள் 120 பேர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?