மொடக்குறிச்சி அடுத்த முள்ளாம்பரப்பில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

மொடக்குறிச்சி அடுத்த முள்ளாம்பரப்பில்  புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
X

Erode news- தனியார் தொழிற்சாலை பணியாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு குறித்து எடுத்துரைத்த ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார்.

Erode news- மொடக்குறிச்சி அருகே முள்ளாம்பரப்பில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

Erode news, Erode news today- மொடக்குறிச்சி அருகே முள்ளாம்பரப்பில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரம் அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட முள்ளாம்பரப்பு பகுதியில் உள்ள பாலாஜி ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள் இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், வாய் புற்றுநோய் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகள், மக்களை தேடி மருத்துவம் திட்ட நோக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, பெண் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் மாதவிடாய் சுகாதார திட்டத்தின் மூலம் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படும் இடங்கள், மாதவிடாய் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார வழிமுறைகள் மற்றும் உணவுப் பழக்க முறைகள், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, சுகாதார ஆய்வாளர்கள் ஜீவானந்தம், தியானேஸ்வரன், செவிலியர்கள், நடமாடும் மருத்துவக் குழு மருந்தாளுநர் மற்றும் பணியாளர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்கள் 90 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்ட பணியாளர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய், வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
ai personal assistant future