சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் புகையிலை, போதைப் பழக்க எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

Erode news- புகையிலை எதிர்ப்பு குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளிடையே மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா எடுத்துரைத்தார்.
Erode news, Erode news today- சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் புகையிலை மற்றும் போதைப் பழக்க எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புகையிலை மற்றும் போதைப் பழக்க எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீங்குகள் உடல் நல பாதிப்புகள், புற்று நோய் பாதிப்புகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை, போதைப் பழக்கத்தால் ஏற்படும் இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், மாணவர்களின் ஒழுக்க நெறி வழிமுறைகள், போதைப் பழக்கத்தால் ஏற்படும் மனநலம் மற்றும் உடல் நல பாதிப்புகள், தமிழ்நாடு அரசின் மனநல திட்டத்தின் நோக்கம், மனநல பாதிப்பு ஏற்படுவதற்கான காரணிகள்,மனநல பாதிப்பின் அறிகுறிகள், மனநல பாதிப்பிலிருந்து விடுபட ஆலோசனை கிடைக்கும் இடம், சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் அதன் பலன்கள், சித்த மருத்துவத்தால் குணப்படுத்தக்கூடிய கட்டுப்படாத நோய்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட மனநல திட்டப் பிரிவு மனநல உளவியலாளர் ஜெயபிரகாஷ், மனநல சமூக சேவகர் கவிதா, பாரம்பரிய சித்த மருத்துவர் திருநாவுக்கரசு, கல்லூரி முதல்வர் முனைவர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் தமிழ்ச்செல்வன், அமைப்பாளர் முனைவர் வெற்றிவேல், கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் 1,200 பேர் கலந்து கொண்டனர்.
மேலும், முகாமின் இறுதியில் புகையிலை மற்றும் போதை பழக்க எதிர்ப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu