சென்னம்பட்டியில் காசநோய் ஒழிப்பு வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

சென்னம்பட்டியில் காசநோய் ஒழிப்பு வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
X

Erode news- சென்னம்பட்டியில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டியில் காசநோய் ஒழிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (4ம் தேதி) நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட சென்னம்பட்டி காலனியில் பொதுமக்களுக்கு காசநோய் ஒழிப்பு, புகையிலை, போதை பழக்க எதிர்ப்பு, தீவிர வயிற்றுப்போக்கு நோய் தடுப்பு, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (4ம் தேதி) நடைபெற்றது.

இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், காச நோயின் வகைகள் அதன் உடல் பாதிப்புகள், நுரையீரல் காச நோயின் ஆரம்ப அறிகுறிகள், காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக கிடைக்கும் இடங்கள், காசநோய்க்கான சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டியவர்கள், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், போதைப் பழக்கத்தால் இளைய தலைமுறையினரின் சீரழிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தொடர்ந்து, தீவிர வயிற்றுப்போக்கு நோய்க்கான காரணிகள் அதற்கான தடுப்பு முறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பெண் கல்வி பாதிப்புகள் மற்றும் சமூக பின்னடைவுகள், இளம் வயது கர்ப்பத்தினால் ஏற்படும் பிரசவகால தாய் சேய் மரணங்கள், கருச்சிதைவுகள், குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல், இரத்தசோகை நோய் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் ஐசக், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயசேகர், தன்னார்வ தொண்டு அமைப்பினர், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 60 பேர்கள் கலந்து கொண்டனர். முகாமின், இறுதியாக அனைவராலும் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், காச நோய்க்கான அறிகுறிகள் உள்ள சந்தேகப்படும் நபர்களுக்கு சளி பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

Tags

Next Story
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவங்களா நீங்க?..அச்சச்சோ..! உடனே அத அவாய்ட் பண்ணுங்க..!