பர்கூரில் கரைபுரண்டு ஓடியது காட்டாற்று வெள்ளம்

பர்கூரில் கரைபுரண்டு ஓடியது காட்டாற்று வெள்ளம்
X

 சுண்டப்பூர் பள்ளத்தில்  கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் 

பர்கூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள, தாமரைக்கரை சுண்டப்பூர், தேவர்மலை, வழுக்குப் பாறை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை கனத்த மழை பெய்தது.சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்த பலத்த மழையால், சுண்டப்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் அப்பகுதியில் இருந்து அந்தியூர் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களுக்கு சென்றவர்கள், தண்ணீர் வடிந்த பின்னரே பள்ளத்தைக் கடந்து சென்றனர்.

இதேபோல் வழுக்குப்பாறை மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால், செலம்பூர் அம்மன் கோவில் பள்ளம் வழியாக எண்ணமங்கலம் ஏரிக்கு வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.ஏற்கனவே எண்ணமங்கலம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதாலும், காட்டாற்று வெள்ளம் காரணமாகவும், கெட்டிசமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!