அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு
X

அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தில் கிணற்றில் விழுந்த பன்றிகள் மீட்கப்பட்டு, காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டன.  

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகளை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் மலைக்கருப்புசாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில், இரண்டு காட்டுப்பன்றிகள் தவறி விழுந்து விட்டதாக, அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திர சாமிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, வனச்சகர அதிகாரியின் உத்தரவின் பேரில், கொம்புதூக்கி மாரியம்மன் கோவில் சரக வனக்காப்பாளர் கேசவமூர்த்தி தலைமையில் வனத்துறையினர், அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜிக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், விவசாய தோட்டத்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி இரண்டு காட்டுப்பன்றிகளையும், கயிற்றின் மூலம் உயிருடன் மீட்டனர். பின்பு தென்பர்கூர் காப்புக்காடு கொம்புதூக்கி மாரியம்மன் கோவில் வனப்பகுதிக்கு கொண்டு சென்று, பன்றிகளை காட்டுக்குள் விட்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா