அந்தியூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாத்திரைகள் வழங்கிய தன்னார்வலர்கள்

அந்தியூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாத்திரைகள் வழங்கிய தன்னார்வலர்கள்
X
அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் சுகாதார நிலையம் சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடு வீடாக மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று சின்னத்தம்பிபாளையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், வீடு வீடாக சென்று சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, கொழுப்பு மாத்திரை, சத்து மாத்திரை, இருதய நோய் சம்பந்தப்பட்ட மாத்திரை ஆகியவற்றை பெண் சுகாதார தன்னார்வலர்கள் வழங்கினர். தொடர்ந்து, சின்னத்தம்பிபாளையம் சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மாத்திரைகளை வழங்கினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்