பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து

பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து
X

விபத்த்திற்குள்ளான வாகனம்.

தாமரைக்கரை செல்லும் வழியில் இரு வேறு சம்பவங்களில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.மேலும் மலைச்சரிவில் இருந்து சாலையில் உருண்டு விழுந்த பாறைகளால் பல இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது. இரண்டு நாட்கள் மண் சரிவை சரி செய்யும் பணி நிறைவடைந்த நிலையில், வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில், அந்தியூரில் இருந்து பர்கூர் நோக்கி சென்ற டாடா சுமோ கார், நெய்க்கரை என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பர்கூர் துருசனாம் பாளையத்தைச் சேர்ந்த ஓட்டுனர் கணேஷ், மற்றும் அதில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதேபோல் இன்று இரவு சுமார் 7 மணியளவில், வரட்டுப்பள்ளம் அணை அருகே தாமரைக்கரை செல்லும் வழியில் உள்ள இரண்டாவது வளைவில், கர்நாடக மாநிலத்தில் இருந்து, அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு தேங்காய் பருப்பு ஏற்றி வந்த பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் ஆகிய 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்று ஒரே நாளில் பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் 2 இடங்களில் நான்கு சக்கர வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மண்ணரிப்பு மற்றும் தார்சாலை சேதம், இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
ai automation in agriculture