அந்தியூர் அருகே வேன் மோதி வாலிபர் மருத்துவமனையில் உயிரிழப்பு
X
By - S.Gokulkrishnan, Reporter |17 Oct 2021 9:45 PM IST
மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வேதகாரன்குட்டையை சேர்ந்த அப்புசாமி மகன் சௌந்தர்ராஜன்(30.) இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 11ம் தேதி தவிட்டுபாளையம் தீயணைப்பு நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த டெம்போ மோதியதில் சவுந்தரராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu