உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

அந்தியூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா திமுக சார்பில் விமர்சையாக கொண்டாடபட்டது.

அந்தியூர் அருகே உள்ள சிந்த கவுண்டன்பாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் திறப்பு விழா மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மன்றத் தலைவர் மோகனசுந்தரம் வரவேற்றார். மாவட்ட துணை பொருளாளர் முருகன், நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில் பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மேலும் ஈரோடு மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் தொடர்ந்து 44 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் நகர பொருளாளர் திவாகர், நகர தலைவர் ஜெய் இளஞ்செழியன், தம்பிராஜ் சிவனந்தம் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!