அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை: 100க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு

அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை: 100க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு
X

வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசார். 

அந்தியூரில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்தியூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் பவானி சாலை, அத்தாணி சாலை மற்றும் பர்கூர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகன உரிமம் இல்லாமல், முகக்கவசம் அணியாமலும், ஹெல்மெட் அணியாமலும் , இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய 100க்கும் மேற்பட்டவர்களிடம் வழக்கு பதிவு செய்தனர். இதில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அதே இடத்தில் ரூ.200/- அபாரதம் வசூலிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!