அந்தியூர் கால்நடை சந்தையில் ரூ . 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில்  ரூ . 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
X

அந்தியூர் கால்நடை சந்தையில் விற்பனைக்கு வந்த மாடுகள்.

அந்தியூர் கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்பனை அதிகரித்து, 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வாரச் சந்தையில், கால்நடை சந்தை சனிக்கிழமைகளில் கூடும். இதையடுத்து இன்று அதிகாலை கூடிய கால்நடை சந்தைக்கு, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் மாடுகள் மற்றும் எருமைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில், 15, 000 மாடுகள் கொண்டு வரப்பட்டு, ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், 500 எருமைகள் கொண்டு வந்த நிலையில், ஆயிரம் ரூபாயிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை என்பதால், இந்த வாரம் அந்தியூர் சந்தைக்கு கால்நடைகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டது. இன்றைய வர்த்தகத்தில், சுமார் 80 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!