ஈரோடு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை சத்தியமங்கலம், கோபி, பவானி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. இதேபோல் 42 பேரூராட்சிகள் உள்ளன. ஒரு மாநகராட்சி உள்ளது. இவற்றில் வார்டு வரையறை, வார்டு விரிவாக்கம் பணிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 5 ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 19-ந்தேதி முதல் கடந்த அக்டோபர் 30-ந் தேதி வரையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 6(பெயர் சேர்த்தல்) படிவம் 7 படிவம் (நீக்குதல்), படிவம் 8 (திருத்தம்) 8யு (இடமாற்றம்) ஆகிய படிவங்களை விசாரணை செய்து வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.
கடந்த 19.3.2021 அன்று ஈரோடு மாவட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 63 ஆயிரத்து 32 ஆக இருந்தது. பின்னர் 8 ஆயிரத்து 242 பேர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 4728பேர் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டுள்ளனர். 1.11.2021 -ன் ஈரோடு மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 66 ஆயிரத்து 546 பேர் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 2222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 9 லட்சத்து 57 ஆயிரத்து 515 பேர். பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 8 ஆயிரத்து 913 பேர், மற்றவர்கள் 118 பேர் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu