தாளவாடி மலைப்பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்: அமைச்சர் ஆய்வு

தாளவாடி மலைப்பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்: அமைச்சர் ஆய்வு
X

ஈரோடு தாளவாடியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Health Department - தாளவாடி மலை பகுதியில் உள்ள ஓசூர் கிராமத்தில் ஹிமோகுளோபினோபதி திட்டம், வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடந்தது

Health Department - தாளவடி மலை பகுதியில் உள்ள ஓசூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க தொடக்க விழா, இருவார கால தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் திட்டம் மற்றும் தொழுநோய் கண்டுபிடிப்பு நேரடி கள ஆய்வுப்பணினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் தாளவடி மலை பகுதியில் உள்ள ஓசூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க தொடக்க விழா, இருவார கால தீவிரமான வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் திட்டம் மற்றும் தொழுநோய் கண்டுபிடிப்பு நேரடி கள ஆய்வுப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். முன்னதாக வயிற்றுப்போக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஹிமோகுளோபினோபதி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: கடந்த நிதிநிலை அறிக்கையில் மருத்துவ துறையின் சார்பில் 136 அறிக்கைகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் அடுத்த நிதிநிலை அறிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் முக்கியமான திட்டமான ஹிமோகுளோபினோபதி திட்ட விரிவாக்கம், இருவார கால தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் திட்டம் மற்றும் தொழுநோய் கண்டுபிடிப்பு ஆகிய தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஒவ்வொரு கிராமத்திற்கும் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது திட்டத்தின் வாயிலாக வீடு கள் தோறும் சென்று வளரும் இளம் பெண்களுக்கும் கருவுற்ற தாய்மார்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இக்கிராமத்தைச் சேர்ந்த செவிலியர் படிப்பு படித்த ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவருக்கு இத்திட்டத்தின் வாயிலாக சிகிச்சை அளிக்கப்படும். ரத்தசோகை குறித்து மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ரத்தசோகை உடைய ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு இருக்கும் பிறக்கும் குழந்தைக்கு ரத்தசோகை நோய் இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அந்தப் பெண் கருவுற்றால் அந்த குழந்தைக்கு அந்த நோய் இருக்கிறதா என்பதை கண்டறிந்து குழந்தையை பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தாளவாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு மற்றும் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் புன்னகை என்ற பெயரில் மலை கிராமத்தில் ஒரு மருத்துவத் திட்டத்தை தொடங்கியுள்ளார். மலை கிராமத்தில் உள்ள படித்தவருக்கு கணினி வசதி மற்றும் இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உடன் தொடர்பு கொண்டு காணொளி காட்சியின் வாயிலாக ஆலோசனை பெற்று சிகிச்சை வழங்கப்படுகின்றது .

இதற்கு 7 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது முதல்வரின் அனுமதி பெற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 45 மலை கிராமங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் சினை முட்டை தானம் என்பது சட்ட அங்கீகாரம் பெற்றது. அதில் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை கருத்தரித்தல் முறை குறித்து ஒரு விரிவான அறிக்கையும், அவற்றை மீறுவோரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஒரு சுற்றறிக்கை விரைவில் தமிழக முழுவதும் அனுப்பப்படும் என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். தொடர்ந்து தாளவாடி மலை கிராமத்தில் நேரடி கள ஆய்வு தொழு நோய் கண்டுபிடிப்பு முகாமை தொடங்கி வைத்து தொழுநோய் குணமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil