வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
X

பைல் படம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் போன்ற சேவை நிமித்தமான பணிகள், அந்தியூர் தாலுகாவில் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில், ஜனவரி 1, 2021ம் ஆண்டு அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில், நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளிலும் மற்றும் நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளிலும், அந்தியூர் தாலுகாவில் உள்ள அனைத்து வாக்குச் சாவடியிலும், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற சேவைகள் நிமித்தமான பணிகள் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture