கீழ்வாணி இந்திராநகரில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்.

கீழ்வாணி இந்திராநகரில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்.
X
கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி பேசிய போது எடுத்த படம் 
அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி இந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் கீழ்வாணி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளியின்‌ தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நடராஜ்,மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார்.

பெற்றோர் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.பின்னர், உறுதிமொழிகளை ஏற்றனர். கூட்டத்தில், கீீழ்வாணி ஊராட்சியின் 3வது வார்டு உறுப்பினர் புஷ்பாவதி, 5வது வார்டு உறுப்பினர் கஸ்தூரி மற்றும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!