அந்தியூர்: 13 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சந்தியபாளையம் ஏரி

அந்தியூர்: 13 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சந்தியபாளையம் ஏரி
X

சந்தியபாளையம் ஏரியின் ரம்மியமான தோற்றம். 

அந்தியூர் அருகே சந்தியபாளையம் ஏரி, 13 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது.

அந்தியூர் அருகே உள்ளது சந்தியபாளை யம் ஏரி. இதன் முழு கொள்ளளவு 12 அடியாகும். அண்மையில் பெய்த தொடர் மழையால் 13 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஏரி நேற்று நிரம்பியது. இதனால்அந்த ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.


இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உபரிநீர் வெளியேறும் இடத்தில் காட்டுபாளையம், சந்தியபாளையம், பிரம்மதேசம், வெள்ளையம்பாளையம், சிந்தகவுண்டன்பாளையம், சேர்த்துனாம்பாளையம், ஏரிக்காடு, செம்புளிச்சாம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மலர்தூவி பூஜை செய்து வரவேற்றனர். சந்தியபாளையம் ஏரியில் இருந்து உபரி நீர் வேம்பத்தி ஏரிக்கு செல்கிறது.

Tags

Next Story
future of ai in retail